வையம்பட்டி அருகே அனுமதியின்றி மதுபானம் விற்ற 3 பேர் மீது வழக்கு

துவரங்குறிச்சி, ஜூன் 23: வையம்பட்டி அருகே அரசு அனுமதியின்றி மதுபானம் விற்ற மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டத திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி பகுதிகளில் அரசு அனுமதியின்றி மதுபானம் விற்பதாக வையம்பட்டி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலை அடுத்து வையம்பட்டி பகுதிகளை ஆய்வு மேற்கொண்ட வையம்பட்டி காவல்துறையினர் லெட்சம்பட்டி பகுதியில் ராமு மகன் முருகானந்தம்(47), ,அதிகாரிப்பட்டி கோட்டை ரோடு பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி(61), அமையபுரம் இடையபட்டி பகுதியைச் சேர்ந்த ராஜா மணி(60) ஆகியோர் வெவ்வேறு இடங்களில் அரசு மதுபானங்களை கள்ளச் சந்தையில் விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதனை அடுத்து மூவர் மீதும் வையம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 20 மதுபான பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இப் பகுதியில் நேற்று முன் தினம் மதுபான விற்பனையில் ஈடுபட்ட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது அவர்களிடம் இருந்து 40 மதுபான பாட்டில்கள் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

The post வையம்பட்டி அருகே அனுமதியின்றி மதுபானம் விற்ற 3 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: