கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருச்சி, ஜூன் 25: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜங்சன் காதிகிராப்ட் அருகில் விவசாயிகள் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில நிர்வாக குழு சிவசூரியன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அனைத்து பாசன கால்வாய்களிலும் கடை மடை வரை தண்ணீர் செல்லும் வகையில் பி.சி.டி பைப் பாசன கால்வாய்களை தூர்வாரி தர வேண்டும். ஆண்டு கணக்கில் சிதிலமடைந்து கிடக்கும் பாசன குழுமிகள் மற்றும் பிரிவு வாய்க்கால்களின் கட்டமைப்புகளை சீரமைத்து தர வேண்டும். நீர் வளத்தை பெருக்கிட காவிரி கொள்ளிடத்தில் கூடுதல் கதவணைகள், தடுப்பணைகள் அமைத்திட வேண்டும்.

அனைத்து ஏரி, குளங்களில் உள்ள சீமை கருவேல மரங்கள், செடி, கொடிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி முழு கொள்ளளவு பெறும் வகையில் சீரமைத்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர். இதில் மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, சிபிஐ புறநகர் மாவட்ட செயலாளர் ராஜ்குமார், மாவட்ட தலைவர் ரமேஷ், உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

The post கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: