பலாத்கார வழக்கு: கோயில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி ஜாமின் கோரி மனு

சென்னை: இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான கோயில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை காளிகாம்பாள் கோயில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு ஒன்று அளித்துள்ளார். அந்த மனுவில் தனக்கு எதிராக புகாரளித்த பெண்ணுடன் சமரசம் ஏற்பட்டுவிட்டதாக அர்ச்சகர் கார்த்திக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி தரப்பில் தாக்கல் செய்த ஜாமின் மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

 

The post பலாத்கார வழக்கு: கோயில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி ஜாமின் கோரி மனு appeared first on Dinakaran.

Related Stories: