தமிழ்நாடு பாடத்திட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றி இடம்பெறவில்லையாம்: கவர்னர் மீண்டும் மீண்டும் சர்ச்சை

ஊட்டி: தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு ஊட்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் 2 நாட்கள் நடந்தது. நேற்று மாலை நிறைவு விழா நடந்தது. இதில் துணைவேந்தர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது: தமிழக பாடத்திட்டத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் வேலு நாச்சியார் போன்ற ஒரு சில சுதந்திரப் போராட்ட தியாகிகளை பற்றி மட்டுமே உள்ளது.

தமிழகத்தில் மற்றும் இந்திய நாட்டில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட மற்றவர்கள் மற்றும் இயக்கங்கள் குறித்து வரலாறு மறைக்கப்பட்டுள்ளது. சுதந்திர போராட்ட வீரர்கள் வரலாறு குறைவாகவே உள்ளது. அதேபோல் தலித் தலைவர்களை பற்றி அதிக வரலாறு இல்லை. ஆனால், திராவிட தலைவர்கள் மற்றும் இயக்கங்கள் குறித்தே அதிகம் இடம் பெற்றுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

 

The post தமிழ்நாடு பாடத்திட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றி இடம்பெறவில்லையாம்: கவர்னர் மீண்டும் மீண்டும் சர்ச்சை appeared first on Dinakaran.

Related Stories: