நன்செய் நிலத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க பயனாளிகள் தேர்வு கோடை நூலக முகாமில் நாட்டுப்புற கலைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி,மே 26: திருச்சி மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில் கோடை நூலக முகாம் பள்ளி மாணவர்களுக்காக மே மாதம் முழுவதும் பயனுள்ள வகையில் பல்வேறு நிகழச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி “தமிழில் பிழையின்றி எழுதுவது எப்படி?” என்ற பயிற்சி மற்றும் “கணக்கும் இனிக்கும்” மற்றும் “அறிவியல் விளையாட்டுகள்” என்ற நிகழ்ச்சிகள் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக நடத்தப்பட்டது. மேலும் கிராப்ட் பேப்பர்களை கொண்டு ஓவியங்களை உருவாக்கும் “ஓரிகாமி” பயிற்சி நடைப்பெற்றது. இதனைத் தொடர்ந்து “ரோபோடிக்ஸ்” பற்றிய செயல்முறை விளக்கம் சிஸ்டெக் ஹார்டுவேர் மற்றும் நெட்வொர்கிங் அகாடமி சார்பில் நடத்தப்பட்டது. மேலும் புதிர் கணக்குகள் பற்றிய பயிற்சியினை காஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றம் பயிற்சி நிறுவன முதல்வர் சிவக்குமார் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். நாட்டுப்புற கலைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியினை லால்குடி முருகானந்தம் விளக்கமாக எடுத்துரைத்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக அறிவியல் பரிசோதனைகள் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
மாநிலச் செயலளார் ஸ்டீபன்நாதன் அறிவியல் பரிசோதனைகள் செய்து காட்டினார். இந்நிலையில் கதை சொல்லும் நிகழ்ச்சி மற்றும் கதை எழுதும் பயிற்சியினை குழுந்தைகளுக்கு கதை சொல்லியும் கதைகள் எழுதும் பயிற்சியினை அளித்தனர். இதனைத் தொடர்ந்து கதைகள் உலகம் தலைப்பில் கதை சொல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் மே.22,23 ஆகிய நாட்களில் ஓவியப் பயிற்சி நடைபெற்றது. அறிவியல் அற்புதங்கள் நிகழ்ச்சி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் விதமாக அறிவியல் அற்புதங்களை எளிமையான முறையிலும் நகைச்சுவையுடனும் மாவட்டச் செயலாளர் மணிகண்டன் பாடலுடன் விளக்கி காட்டினார்.

The post நன்செய் நிலத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க பயனாளிகள் தேர்வு கோடை நூலக முகாமில் நாட்டுப்புற கலைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: