“மழை வரப் போகுதே..”தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு : ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம் !!

சென்னை : தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஒருசில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 12 சென்டி மீட்டர் முதல் 20 சென்டி மீட்டர் வரை மழை பெய்யும் என்பதால் தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வரும் 28ம் தேதி வரை மன்னார் வளைகுடா, குமரிக்கடல், அந்தமான், லட்சத்தீவு, தென் தமிழ்நாடு கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 55 கிமீ வேகம் வரை வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் அப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது. இதனிடையே தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இன்று காலை வரை இயல்பைவிட 122% கூடுதலாக பெய்துள்ளது என்றும் ஜூன் 1-ம் தேதி முதல் இன்று காலை வரை வழக்கமாக 43.8 மி.மீ. மழை பதிவாகும் நிலையில் 97.4 மி.மீ. மழை பெய்துள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The post “மழை வரப் போகுதே..”தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு : ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம் !! appeared first on Dinakaran.

Related Stories: