தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால் ஆத்திரம்; 5 வயது மகளை கிணற்றில் தள்ளி கொன்ற தாய்

மேலூர்: மேலூர் அருகே தகாத உறவுக்கு இடையூறாக இருந்த மகளை, கிணற்றில் தள்ளி கொலை செய்த தாய் கைதானார். மதுரை மாவட்டம் மேலூர் அருகே ஆட்டுக்குளத்தை சேர்ந்தவர் சமயமுத்து. மனைவி மலர்விழி (27). சமயமுத்து துபாயில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் 5 வயது இளைய மகளை காணவில்லை என மேலூர் போலீஸ் ஸ்டேஷனில் மலர்விழி புகார் அளித்தார். இந்நிலையில், நேற்று காலை அப்பகுதியில் உள்ள வயல்வெளி கிணற்றில் தனது குழந்தையின் உடல் மிதப்பதாக அவர் உறவினர்களிடம் கூறி உள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த மேலூர் போலீசார் மலர்விழியை காவல்நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர். அப்போது, கணவர் வெளிநாட்டில் இருப்பதால், மலர்விழிக்கு அப்பகுதியை சேர்ந்த சிலருடன் தகாத உறவு இருப்பது தெரியவந்தது. இதனை அவரது மகள் நேரில் பார்த்துள்ளார்.இதனால் அதிர்ச்சியடைந்து, மகளை கிணற்றில் தள்ளி கொலை செய்ததாக மலர்விழி வாக்குமூலம் அளித்தார். அவரது காதலன் குறித்து விசாரித்தபோது, பாஸ்கர் மற்றும் தர்மராஜ் என இருவரின் பெயர்களை கூறினார்.

அவர்களிடம் நடந்த விசாரணையில், மலர்விழிக்கு தங்களை போல் பலருடன் தொடர்பு இருப்பதாகவும், இந்த கொலைக்கும், தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்றனர். தான் மகளை கொலை செய்தது குறித்து யாருக்கும் தெரியாது என மலர்விழியும் கூறியுள்ளார். இதையடுத்து மலர்விழியை கொலை வழக்கில் கைது செய்த போலீசார், மேலும் யார், யாருடன் அவருக்கு தொடர்பு இருந்தது? குழந்தை மரணத்தில் வேறு யாருக்கும் சம்பந்தம் உள்ளதா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால் ஆத்திரம்; 5 வயது மகளை கிணற்றில் தள்ளி கொன்ற தாய் appeared first on Dinakaran.

Related Stories: