ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூகுள் பே மூலம் 2.5 லட்சம் மோசடி: வாலிபருக்கு வலைவீச்சு

அண்ணாநகர்: சென்னை அமைந்தகரை பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர், அமைந்தகரை காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது;
அமைந்தகரையில் உள்ள எனது அத்தை வீட்டில் தங்கியிருந்து தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறேன். கடந்த 15 நாட்களுக்கு முன்பு எனது செல்போனுக்கு சதீஷ்(எ)ரமேஷ் என்பவர் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர், ‘’உனது கல்லூரியில் படித்து தற்போது கல்லூரியில் இருந்து பாதியில் நின்றுவிட்டேன். தற்போது ரயில்வேயில் வேலை வர உள்ளது’’ என்று தெரிவித்தார்.

இதன்பின்னர் தனக்கும் ரயில்வேயில் வேலை வாங்கி தருகிறேன் அதற்கு 3 லட்சம் கொடுங்கள் என்றார். இதை நம்பி கூகுள் பே மூலம் கொஞ்சம், கொஞ்சமாக இரண்டரை லட்சம் வரை அனுப்பினேன். இதன்பிறகு வேலையும் வாங்கி கொடுக்காமல் பணத்தையும் திருப்பி தராமல் அலட்சியமாக பேசினார். இதன்பின்னர் சதீஷ் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது செல்போன் சுவீட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. எனவே ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இதன் அடிப்படையில், போலீசார் வழக்குபதிவு செய்து கல்லூரி மாணவரிடம் 2.5 லட்சம் ஏமாற்றிய நபரை தேடி வருகின்றனர்.

The post ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூகுள் பே மூலம் 2.5 லட்சம் மோசடி: வாலிபருக்கு வலைவீச்சு appeared first on Dinakaran.

Related Stories: