பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆர்எஸ்எஸ்-ஐ தடை செய்வார்கள்: உத்தவ் தாக்கரே பரபரப்பு பேச்சு

மும்பை: பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்வார்கள் என்று உத்தவ் தாக்கரே தெரிவித்தார். மகாராஷ்டிராவில் 5ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதனால் நேற்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்துவிட்டது.மும்பையில் இறுதி கட்ட பிரசாரத்தில் சிவசேனா(யுபிடி) தலைவர் உத்தவ்தாக்கரே பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடியின் வேலைக்காரர் போல தேர்தல் ஆணையர் செயல்படுகிறார். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அவரை பதவி நீக்கம் செய்வோம். அதே போல பாரதிய ஜனதாவின் ஏவல்காரர்களாக செயல்பட்ட அனைவரையும் பதவி நீக்கம் செய்வோம்.

எங்கள் கட்சியை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிய பாஜ முயன்றதுபோல், ஆர்.எஸ்.எஸ் அமைப்பையும் தூக்கி எறிவார்கள். பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்வார்கள். “எங்களுக்கு இதுவரை ஆர்.எஸ்.எஸ்.சின் உதவி தேவைப்பட்டது. இப்போது நாங்கள் வளர்ந்துவிட்டோம். இனி ஆர்.எஸ்.எஸ். எங்களுக்கு தேவையில்லை” என்று பாஜ தலைவர் நட்டா கூறியுள்ளார். இதனால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்ய போகிறார்கள் என்று உறுதியாக தெரிகிறது. இதனால் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் சிக்கலில் மாட்டிக்கொள்வார்கள். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்படும். ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள்தான் கடுமையாக பாடுபட்டு மோடிக்கு அரசியல் களம் அமைத்துக்கொடுத்தனர். அப்படிப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பை பிரதமர் மோடி ஏன் தடை செய்யப் பார்க்கிறார் என்றார்.

The post பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆர்எஸ்எஸ்-ஐ தடை செய்வார்கள்: உத்தவ் தாக்கரே பரபரப்பு பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: