அடுத்த 3 மணி நேரத்தில் தென்காசி , தேனி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: கடந்த வருடம் போல இந்த வருடமும் கோடை வெயில் சீக்கிரமே தொடங்கி விட்டது. மார்ச் தொடக்கத்தில் சூடேறிய வெயில், ஏப்ரல் மாதத்தில் உச்சத்தை எட்டியது. ஏப்ரல் மாதத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் என்கிற அளவில் பதிவாகியிருந்தது. இதனால் மக்கள் கடும் அவதியுற்றனர். ஆனால், தற்போது மழை தீவிரமடைந்து வருகிறது. லோக்சபா தேர்தல் 2024 தொகுதிகள் | வேட்பாளர்கள் | தேர்தல் தேதிகள் சென்னை தொடங்கி டெல்டா, கொங்கு, தென் மாவட்டங்கள் என மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு குறிப்பிட்ட சில மாவட்டங்களுக்கு ரெட் மற்றும் மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோடை வெப்பம் தணிந்து பல பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி ,திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் , சேலம், கள்ளக்குறிச்சி, தென்காசி , தேனி ஆகிய 14 மாவட்டங்களிலும் புதுச்சேரி பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அடுத்த 3 மணி நேரத்தில் தென்காசி , தேனி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: