அரசியலமைப்பை மாற்ற நினைப்பவர்களை மக்கள் மாற்றி விடுவார்கள்: அகிலேஷ்

கெயின்சரி: உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூ கார்கே மற்றும் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் நேற்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அகிலேஷ் யாதவ், “இந்திய ராணுவத்தில் ஆள்சேர்க்கும் அக்னிவீரர் திட்டம் இளைஞர்களின் ராணுவ கனவை பறித்து விட்டது. அரசு ஆள்சேர்ப்பு தேர்வுகளின் வினாத்தாள்களை அரசு கசிய விட்டு இளைஞர்களை ஏமாற்றி வருகிறது. பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் காவலர்களின் பணி தற்காலிகமாக மாற்றப்படும்” என்று குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அகிலேஷ் யாதவ், “பாஜ அரசு மோசமான அரிசியை ஏழைகளுக்கு இலவசமாக தருகிறது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஏழைகளுக்கு வழங்கப்படும் இலவச ரேஷன் அரசியின் தரம் மேம்படுத்தப்பட்டு, அதன் அளவும் அதிகரிக்கப்படும். அரசியலமைப்பு நிலைத்திருந்தால்தான் ஜனநாயகம் நிலைத்திருக்கும். அம்பேத்கர் கொண்டு வந்த அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற நினைக்கும் பாஜவை மக்கள் மாற்றி விடுவார்கள்” என்று தெரிவித்தார்.

The post அரசியலமைப்பை மாற்ற நினைப்பவர்களை மக்கள் மாற்றி விடுவார்கள்: அகிலேஷ் appeared first on Dinakaran.

Related Stories: