ஒடிசாவில் கடைசிகட்ட பிரசாரம்; மோடி, அமித் ஷா, கார்கே, ராகுல் முகாம்: அடுத்தடுத்த பேரணியால் பரபரப்பு

புவனேஸ்வர்: ஒடிசாவில் கடைசிகட்ட பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் அடுத்தடுத்த நாட்களில் மோடி, அமித் ஷா, கார்கே, ராகுல் போன்ற தலைவர்கள் பிரசாரம் செய்கின்றனர். ஒடிசா மாநிலத்தில் மக்களவை தேர்தலுடன் மாநில சட்டமன்றப் பேரவை தேர்தலும் பல கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது.

மக்களவையின் 4ம் கட்டத்தில் இருந்து தொடர்ந்து 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 7வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு வரும் ஜூன் 1ம் ேததி நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரம் வரும் 30ம் தேதியுடன் முடிவடைய உள்ளதால், அரசியல் தலைவர்களின் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

பிரதமர் மோடி வரும் 29ம் தேதி (நாளை மறுநாள்) ஒடிசாவின் பரிபாடா, பாலசோர், கேந்த்ராபரா ஆகிய மூன்று இடங்களில் நடக்கும் பொதுக் கூட்டங்களில் உரையாற்றுகிறார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாளை சந்த்பாலி, கோரே, நிமாபாடா ஆகிய மூன்று இடங்களில் நடக்கும் பேரணிகளில் பங்கேற்கிறார்.

அதேபோல் காங்கிரஸ் தலைவர் கார்கே, முன்னாள் தலைவர் ராகுல்காந்தி போன்ற தலைவர்களும் இன்று முதல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒடிசாவில் ஆளும் பிஜூ ஜனதா தளம், பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மும்முனை போட்டி நிலவுவதால் கடைசி கட்ட தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

The post ஒடிசாவில் கடைசிகட்ட பிரசாரம்; மோடி, அமித் ஷா, கார்கே, ராகுல் முகாம்: அடுத்தடுத்த பேரணியால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: