மகாராஷ்டிராவில் ஆளும் கூட்டணியில் சட்டப் பேரவை தேர்தல் சண்டை ஆரம்பம்… துணை முதல்வர் – அமைச்சர் மோதல்

மும்பை: மகாராஷ்டிராவில் ஆளும் கூட்டணி தலைவர்கள் சட்டப் பேரவை தேர்தலில் ெதாகுதி பங்கீடு குறித்த தங்களது கருத்துகளை கூறி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். மகாராஷ்டிராவில் பாஜக, துணை முதல்வர் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 48 இடங்களில் அஜித் பவார் தலைமையிலான கட்சியானது பாராமதி, ஷிரூர், ராய்காட், தாராஷிவ் (உஸ்மானாபாத்) ஆகிய 4 தொகுதிகளிலும், பாஜக 29 தொகுதிகளிலும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 15 தொகுதியிலும் போட்டியிட்டன. எதிர்கட்சிகள் வரிசையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்), சிவசேனா (உத்தவ்) கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டுள்ளன.

லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பே, மகாராஷ்டிராவில் வரும் அக்ேடாபர் மாதத்திற்குள் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறுவதால், அது தொடர்பான அரசியலும் தீவிரமடைந்து வருகிறது. அஜித் பவார் அணியின் மூத்த தலைவரும், மாநில அமைச்சருமான சக்கன் புஜ்பால் அளித்த பேட்டியில், ‘எங்களது கட்சிக்கு வரும் சட்டசபை தேர்தலில் 80 முதல் 90 தொகுதிகள் ஒதுக்க வேண்டும். பாஜக-சிவசேனா-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைந்த போது, எங்களுக்கு பேரவை தேர்தலில் 80 முதல் 90 சீட் தருவதாக உறுதி கூறினர். ஆனால் மக்களவைத் தேர்தலில் எங்களது கட்சிக்கு மிகக் குறைந்த இடங்களே கிடைத்துள்ளன’ என்றார். இதுகுறித்து துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், ‘பாஜக மிகப்பெரிய கட்சி; வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் நாங்கள் அதிக இடங்களில் போட்டியிடுவோம். எவ்வாறாயினும், மூன்று கட்சிகளின் தலைவர்கள் ஒன்று கூடி ஆலோசித்த பின்னரே, தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும்’ என்றார்.

The post மகாராஷ்டிராவில் ஆளும் கூட்டணியில் சட்டப் பேரவை தேர்தல் சண்டை ஆரம்பம்… துணை முதல்வர் – அமைச்சர் மோதல் appeared first on Dinakaran.

Related Stories: