காங். மூத்த தலைவர் பேட்டி தென்னிந்தியாவில் பாஜ மொத்தமும் காலியாகும்: மற்ற மாநிலத்தில் வெற்றி பாதியானது

ராஞ்சி: தற்போது 4 கட்ட மக்களவை தேர்தல் முடிந்துள்ள நிலையில், இதில் 379 தொகுதிகளில் பாஜ 270 தொகுதிகளை கைப்பற்றி விட்டதாகவும், தென்னிந்தியாவில் அனைத்து மாநிலத்திலும் சிறப்பான வெற்றிகளை பதிவு செய்திருப்பதாகவும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி உள்ளார். இதே போல, ‘இந்து-முஸ்லிம் அரசியலை கையிலெடுத்தால் நான் அரசியலுக்கு தகுதியற்றவனாகி விடுவேன்’ என பிரதமர் மோடி கூறி உள்ளார். இது தொடர்பாக, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: பிரதமர் மோடி மத அடிப்படையில் பிரசாரம் செய்து வாக்காளர்கள் இடையே பிளவை ஏற்படுத்த முயற்சித்து விட்டு, இப்போது அவர் இந்து-முஸ்லிம் குறித்து அரசியல் செய்யவில்லை என பொய் பேசுகிறார். பிரதமர் மோடி வெளியேறப் போகும் பிரதமராகி விட்டார். தேர்தலின் ஆரம்ப கட்டத்திற்குப் பிறகு அவரது விரக்தி இதை நிரூபிக்கிறது. இதே போல அமித்ஷாவும் வெளியேறப் போகும் உள்துறை அமைச்சர். உண்மையிலேயே தற்போது வரை முடிந்துள்ள தேர்தலில், பாஜ தென்னிந்தியாவில் மொத்தமும் தோல்வி அடைந்து விட்டது. மற்ற மாநிலங்களில் அதன் வெற்றி பாதியாக சுருங்கி விட்டது. எனவே ஜூன் 4க்குப் பிறகு இந்த பொய்களின் தொற்றுநோயிலிருந்து நாம் விடுபடுவோம். மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும். அதன் பின் நாடு தழுவிய சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

The post காங். மூத்த தலைவர் பேட்டி தென்னிந்தியாவில் பாஜ மொத்தமும் காலியாகும்: மற்ற மாநிலத்தில் வெற்றி பாதியானது appeared first on Dinakaran.

Related Stories: