காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளராக சுப்ரியா பரத்வாஜ் நியமனம் செய்து உத்தரவு

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளராக சுப்ரியா பரத்வாஜை நியமனம் செய்து அக்கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சுமார் 14 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத்துறையில் பணியாற்றி வந்தவர் சுப்ரியா பரத்வாஜ். இவர் கடந்த 2009ம் ஆண்டு முதல் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தியாளராக பணியாற்றி வந்தார். கடந்த 2023ம் ஆண்டு ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்ற போது, அதனை நாடு முழுவதும் சென்று செய்தியாக்கி இருந்தார். கடந்த 2023ம் ஆண்டு ஊடகத்துறையிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்தார்.

அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்து, பணியாற்றி வந்தார். சமீபத்தில் நடைபெற்ற ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை நிகழ்ச்சியின் போது அவர் காங்கிரஸ் கட்சிக்காக ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டிருந்தார். இந்த நிலையில் சுப்ரியா பரத்வாஜை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளராக நியமித்து ஊடகப்பிரிவு தலைவர் பவன் கேரா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு மிக நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.

The post காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளராக சுப்ரியா பரத்வாஜ் நியமனம் செய்து உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: