திருவரம்பு மாறப்பாடி பாலம் பகுதியில் பட்டுப்போன மரத்தை அகற்ற கோரிக்கை

குலசேகரம், மே 14: குலசேகரத்தில் இருந்து அருமனை செல்லும் சாலையில் திருவரம்பு, மாறப்பாடி பகுதியில் கோதையாற்றின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் அருகில் தீக்குச்சிகள் தயாரிக்க பயன்படும் பெருமரம் ஒன்று நீண்ட நாட்களாக பட்டு போன நிலையில் உள்ளது. இதன் அருகே உயர் மின்னழுத்த கம்பிகள் செல்கிறது. மரம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் என்ற ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் குலசேகரம் – அருமனை சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பயந்த நிலையில் பயணிக்கின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு பல மனுக்கள் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.

இந்த சாலை போக்குவரத்து நிறைந்த சாலையாகும். இதனால் மரம் விழுந்தால் பெரும் பாதிப்பு ஏற்படும். இதன் அருகில் மின் கம்பிகள் மற்றும் தனியார் மருத்துவமனை கட்டிடம் இருப்பதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. காற்று, மழை நேரத்தில் இது பாதிப்பை ஏற்படுத்தும். எனவே நெடுஞ்சாலை துறை நடவடிக்கை மேற்கொண்டு பட்டுப் போன மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருவரம்பு மாறப்பாடி பாலம் பகுதியில் பட்டுப்போன மரத்தை அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: