ஜூன் மாதம் நான் ஆட்சிக்கு வந்தவுடன் ஜூலையில் மூத்த குடிமக்களுக்கு ₹4000 பென்சன் வழங்கப்படும்

*தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு பேச்சு

திருமலை : ஜூன் மாதம் நான் ஆட்சிக்கு வந்தவுடன் ஜூலையில் மூத்த குடிமக்களுக்கு ₹4000 பென்சன் வழங்கப்படும் என்று தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு பேசினார்.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் பண்யம் நகரில் தேர்தல் பிரசார கூட்டம் நேற்று நடந்தது. இதில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு பங்கேற்று பேசியதாவது:
கடந்த தேர்தலில் ராயலசீமாவில் மொத்தமுள்ள 52 இடங்களில் 49 இடங்களில் ஜெகன் வெற்றி பெற்றார். ஆனால் இப்போது 52 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறுவோம். ராயலசீமாவில் மூன்று இடங்களில் மட்டுமே நாம் வெற்றி பெற்றதாக ஜெகன் கேலி செய்தார். இப்போது அவர் போட்டியிடும் புலிவேந்துலாவில் கூட ஜெகனுக்கு எதிர்காற்று வீசி வருவதால் விரக்திக்கு வந்துவிட்டார்.

ஜெகனுக்கு கோபம் வந்தால் டிவியை உடைத்து விடுவார். ஆனால் இப்போது இந்த ஏமாற்றத்தில் எத்தனை பேர் பலியாவார்கள் என்று தெரியவில்லை. ஜெகன் 5 ஆண்டுகளாக அனைத்து திட்டப் பணிகளையும் நிறுத்தினார். ஜெகன் ஒரு சைக்கோ. ஜெகனுக்கு நாசீசிசம் என்ற நோய் உள்ளது. அவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும், எதிர்த்தால் தாக்கி கொல்லப்படுவார்கள் என்ற கொள்கையைத்தான் ஜெகனும் செயல்படுத்தி வருவதாக மருத்துவர் ஒருவர் தெரிவித்தார். ஹிட்லர், பின்லேடன், இதே மனநிலையில் இருந்தவர்கள்.

நந்தியாலாவில் இருந்த என்னை வழக்கு எதுவும் இல்லாமல் நள்ளிரவில் வந்து கைது செய்தார்கள். ஏன் என்று கேட்டால் பதில் இல்லை. எனக்கே இந்த நிலை என்றால், சாமானியர்களின் நிலை என்ன? சித்தப்பாவை கோடரியால் கொன்றது, கல் வீச்சு காயம் நாடகம், சேவல் கத்தி தாக்குதல் நாடகம், தந்தை இல்லாத குழந்தை என்று கூறிவிட்டு தந்தையை கொன்றவர்களுக்கு எம்.பி பதவி வழங்கப்பட்டது.

கடவுளை விட ஜெகன் பெரியவர் என்று நினைக்கிறார்கள். ஆட்சி அதிகாரம் கொடுத்தால் ஒரு நாள் கூட தலைமை செயலகம் வரவில்லை. தேர்தலுக்கு முன், தலைநகர் அமராவதி என்று கூறிய ஜெகன், ஆட்சிக்கு வந்த பின், மூன்று தலைநகரங்களாக மாற்றினார். இது நாசீசிஸ்டிக் அணுகுமுறை இல்லையா?மாநிலம் 13 லட்சம் கோடி கடன் பெற்றுள்ளது. இந்த அரசில் யாரும் முன்னேறவில்லை. மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவில்லை, வருமானம் அதிகரிக்கவில்லை, ஆனால் ஜெகனின் வருமானம் அதிகரித்தது. மதுபானம்ரூ.60 ஆக இருந்தது, தற்போது ரூ.200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

என்னை கொல்ல திட்டம் தீட்டினார்கள். திருப்பதி அலிபிரியில் குண்டு வெடிப்பில், வெங்கடேஸ்வர சுவாமி ஏழு மலைகளிலிருந்து இறங்கி வந்து என்னைக் காப்பாற்றினார்.
ஆனால் ஜெகனை தாக்கிய கல்லை பார்க்க முடியாது. நான் கொல்ல முயற்சி செய்தேன் என்று நாடகமாடுகிறார்கள். டிராக்டர் மணல் ரூ.1000 இருந்தது, தற்போது ரூ.5000 ஆக அதிகரித்துள்ளது. ஜெகனுக்கு ரூ.4000 செல்கிறது. ஒரு சாலையும் அமைக்கப்படவில்லை. ஒரு கால்வாய் நிரம்பவில்லை, ஒரு திட்டமும் அமைக்கப்படவில்லை.

தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தல் அறிக்கையில் மோடி உத்தரவாதம் உங்கள் வாழ்க்கையை மாற்றும். பெண்களுக்கு நல்ல நாட்கள் வரும். அண்ணா கேண்டீன், ரம்ஜான் தோபா, முஸ்லிம் பெண்களுக்கு துல்ஹான், பண்டிகை பரிசு தொகுப்பு வழங்கப்பட வேண்டும் என்றால் தெலுங்கு தேசம் வரவேண்டும். ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் மாதம்ரூ.1,500 வழங்குவோம். தாய்க்கு வந்தனம் திட்டத்தின் கீழ், படிக்கும் ஒவ்வொரு மாணவருக்கும் ரூ.15,000 கொடுப்போம்.

அனைவருக்கும் கல்வி கற்பது எங்கள் பொறுப்பு, 3 சமையல் எரிவாயு சிலிண்டர்களை இலவசமாக தருவோம். பெண்களுக்கு இலவச பேருந்து வசதி செய்து தருவோம். பெண் குழந்தைகளை கோடீஸ்வரர்களாக்கும் திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. பெண்களுக்கு சட்டமன்றங்களில் 33 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்டவை கொண்டு வரப்படும். ஜூன் மாதம் நான் ஆட்சிக்கு வந்தவுடன் ஜூலையில் ரூ.4000, மூத்த குடிமக்களுக்கு பென்சன் வழங்கப்படும்.

ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் ரூ.3000 சேர்த்து முதல் தேதி உங்கள் வீட்டில் ரூ.7000 தருவேன்.தன்னார்வலர்கள் பற்றாக்குறையை காரணம் காட்டி 33 முதியோர்கள் செயலகத்திற்கு வருமாறு கூறி இறக்க காரணமானார். இன்று வங்கிகளையே சுற்றி வருகின்றனர். தன்னார்வலர்கள் அனைவருக்கும் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். 80 சதவீத ஊழியர்கள் கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர். வெயில் என்று பின்வாங்க வேண்டாம், வாக்களிக்காமல் முன் நகர வேண்டாம்.இவ்வாறு அவர் பேசினார்.

The post ஜூன் மாதம் நான் ஆட்சிக்கு வந்தவுடன் ஜூலையில் மூத்த குடிமக்களுக்கு ₹4000 பென்சன் வழங்கப்படும் appeared first on Dinakaran.

Related Stories: