பாஜ எம்பி பிரிஜ்பூஷன் மகனின் கான்வாய் மோதி 2 வாலிபர்கள் பலி


கோண்டா: த்தரப்பிரதேச மாநிலம் கைசர்கஞ்ச் மக்களவைத் தொகுதியில், பாஜ தற்போதைய எம்பியும் பாலியல் புகாரில் சிக்கிய பிரிஜ் பூஷன் ஷரன் சிங்கின் மகன் கரண் பூஷன் சிங் போட்டியிடுகிறார். இந்நிலையில் கரண் பூஷன் சிங் தனது ஆதரவாளர்களுடன் கைசர்கஞ்சில் இருந்து காரில் சென்றார். அப்போது கோட்வாலி பைகுந்த் கல்லூரி அருகே அவரது வாகனம் சென்று கொண்டிருந்த போது, அவ்வழியாக 3 வாலிபர்கள் பைக்கில் வந்தனர். எதிர்பாராதவிதமாக அதிவேகமாக சென்ற ேபாலீஸ் கான்வாய் வாகனம், பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூன்று பேரும் படுகாயமடைந்தனர்.

அவர்களில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மூன்றாவது நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கோர விபத்து நடந்தும், கரண் பூஷன் சிங் சம்பவ இடத்தில் நிற்காமல் அங்கிருந்து ஓடிவிட்டார். அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், கரண் பூஷன் சிங்கின் அலட்சியத்தை கண்டித்தும், விபத்தில் 2 பேர் பலியானதை கண்டித்தும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த விபத்து தொடர்பாக கார் டிரைவர் லவ்குஷ ஸ்ரீவஸ்தவா கைது செய்யப்பட்டார் என போலீசார் நேற்று தெரிவித்தனர்.

The post பாஜ எம்பி பிரிஜ்பூஷன் மகனின் கான்வாய் மோதி 2 வாலிபர்கள் பலி appeared first on Dinakaran.

Related Stories: