டைனோசர்கள் போல காங். அழிந்துவிடும்: ராஜ்நாத் சிங் பிரசாரம்


கராகட்: காங்கிரஸ் கட்சியானது டைனோசர்கள் போல அழிந்துவிடும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம், கராகட் மக்களவை தொகுதியில் பாஜ வேட்பாளரை ஆதரித்து நடந்த தேர்தல் பிரசாரத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசியதாவது, ‘‘ஒரு குடும்பத்தில் 4 பேர் இருந்தால் ஒவ்வொருவருக்கும் ரேஷனில் தலா 5 கிலோ கிடைக்கிறது. விலைவாசி உயர்வு குறித்து நிறைய பரபரப்பு நிலவுகிறது. நமது நாட்டின் உணவுப் பணவீக்கம் உலகிலேயே மிக குறைவாக 2.91 சதவீதமாக இருக்கிறது.

இது அமெரிக்காவில் 7.79, பிரான்ஸ் 19 மற்றும் ஆஸ்திரேலியாவில் 8.5 சதவீதமாக உள்ளது. இந்த உண்மைகளை காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணியான ராஷ்ட்ரிய ஜனதா தளத்தினால் மறுக்க முடியுமா? காங்கிரஸ் விரைவில் டைனோசர்கள் போல அழிந்துவிடும். ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் சுடர் நிலையற்றது. அந்த விளக்கின் எண்ணெய் தீர்ந்துகொண்டு இருக்கிறது” என்றார்.

The post டைனோசர்கள் போல காங். அழிந்துவிடும்: ராஜ்நாத் சிங் பிரசாரம் appeared first on Dinakaran.

Related Stories: