கடைசி கட்டதேர்தல்: 57 தொகுதிகளில் இன்று பிரசாரம் ஓய்கிறது

புதுடெல்லி: மக்களவை தேர்தல் கடைசி கட்டமாக 57 தொகுதிகளில் இன்று பிரசாரம் ஓய்கிறது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏப்.19 தொடங்கியது. இதுவரை 6 கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது. மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில் 486 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. மீதமுள்ள 57 தொகுதிகளுக்கு வரும் ஜூன் 1ம் தேதி ஏழாவது மற்றும் கடைசி கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த கட்டத்தில் பிரதமர் மோடி போட்டியிடும் வரணாசி தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், கடைசி கட்ட தேர்தல் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

பீகாரில் 8 தொகுதிகள், சண்டிகரில் ஒரு தொகுதி, இமாச்சல பிரதேசத்தில் 4 தொகுதிகள், ஜார்கண்டில் 3 தொகுதிகள், ஒடிசாவில் 6 தொகுதிகள், மேற்குவங்கத்தில் 9 தொகுதிகள், பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேசத்தில் தலா 13 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த 57 தொகுதிகளில் 904 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இங்கு இன்று மாலையுடன் (மே 30) பிரசாரம் ஓய்கிறது. அதே போல் ஒடிசாவில் 41 தொகுதிகளிலும் பேரவை தேர்தல் நடப்பதால் அங்கும் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது.

The post கடைசி கட்டதேர்தல்: 57 தொகுதிகளில் இன்று பிரசாரம் ஓய்கிறது appeared first on Dinakaran.

Related Stories: