திருவெறும்பூர் அருகே வாகன விபத்தில் 4 பேர் காயம்

திருவெறும்பூர், மே 3: திருவெறும்பூர் அருகே உள்ள சர்க்கார் பாளையம் கல்லணை சாலையில் ஆட்டோ, இருசக்கர வாகனம் மீது லோடுவேன் மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் உள்பட 4 பேர் பலத்த காயமடைந்தனர். திருவெறும்பூர் அருகே உள்ள சர்க்கார்பாளையம் -கல்லணை சாலையில் திருச்சி -கல்லணை – திருக்காட்டுப்பள்ளி ஆகிய பகுதிகளுக்கு நாள்தோறும் பல ஆயிரகணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. இந்த நிலையில் சர்க்கார் பாளையம் கல்லணை சாலையில் வேக கட்டுப்பாடு இல்லாமல் வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகிறது. நேற்று சர்க்கார்பாளையம் பகுதியில் திருவெறும்பூர் அருகே உள்ள திருவளர்ச்சிபட்டியை சேர்ந்த லட்சுமணன் லோடு ஆட்டோவை ஓட்டி வந்தார். அப்போது எதிரே வந்த பனையக்குறிச்சியை சேர்ந்த துரைப்பாண்டி (60) என்பவர் ஓட்டி வந்த ஆட்டோ மீதும், ஒட்டக்குடி மேலத் தெருவைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் ராஜ்குமார் (30) என்பவரின் இருசக்கர வாகனம் மீதும் லோடு ஆட்டோ மோதியது. இதில் பலத்த காயமடைந்த துரைப்பாண்டி, ராஜ்குமார் ஆகியோர் திருச்சி ஜிஹெச் மற்றும் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்தில் 2 பெண்களும் காயம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

The post திருவெறும்பூர் அருகே வாகன விபத்தில் 4 பேர் காயம் appeared first on Dinakaran.

Related Stories: