ஒடிசா முதல்வருக்கு ரூ71 கோடி சொத்து

பெர்ஹாம்பூர்: ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் சொத்து மதிப்பு ரூ71.07 கோடி என தேர்தல் வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசா சட்டப்பேரவை தேர்தலில் ஹிஞ்சிலி தொகுதியில் முதல்வர் நவீன் பட்நாயக் 6வது முறையாக போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்தார். அதில் அவரது சொத்து மதிப்பு ரூ71.07 கோடி என்று குறிப்பிட்டு உள்ளார். 2019ல் அவரது சொத்து ரூ63.87 கோடியாக இருந்தது. தற்போது ரூ7 கோடி சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. ரூ14.05 கோடிக்கு மேல் அசையும் சொத்துக்கள், ரூ 57.02 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

புவனேஸ்வரில் உள்ள ரூ13.66 கோடி நவீன் நிவாஸ், டெல்லி அப்துல் கலாம் சாலையில் உள்ள ரூ43.35 கோடி மதிப்புள்ள வீடு ஆகியவை அவரது அசையா சொத்துகளாகும். அவரிடம் ரூ 4.17 லட்சம் மதிப்பிலான மாணிக்கங்கள், வைரங்கள் மற்றும் வெள்ளி (ஐந்து துண்டுகள்) கொண்ட 45.77 கிராம் பொத்தான்களை வைத்திருக்கிறார். கைவசம் 30,000 ரூபாயும், 1980 மாடல் அம்பாசிடர் காரும் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு எதிராக எந்தவித கிரிமினல் வழக்கும் இல்லை.

The post ஒடிசா முதல்வருக்கு ரூ71 கோடி சொத்து appeared first on Dinakaran.

Related Stories: