டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட அணியை அறிவித்தது தென்னாப்பிரிக்கா

கேப்டவுன்: 2024ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பைக்கான தங்கள் அணியை தென்னாப்பிரிக்கா அறிவித்துள்ளது. டி20ஐ கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு ஐசிசி தொடர்களில் முதன்முறையாக எய்டன் மார்க்ரம் தென்னாப்பிரிக்கா அணியை வழிநடத்த உள்ளார்.

அன்ரிச் நார்ட்ஜே மற்றும் குயின்டன் டி காக் ஆகியோர் சமீபத்தில் தென்னாப்பிரிக்காவின் ஒப்பந்தப் பட்டியலில் இருந்து விலக்கப்பட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள், தற்போது அவர்கள் டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பெற்றுள்ளனர். முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக நார்ட்ஜே செப்டம்பர் 2023 முதல் சர்வதேச போட்டிகளில் இருந்து ஒதுங்கியுள்ளார்.

அதே நேரத்தில் டி காக் 2023 கிரிக்கெட் உலகக் கோப்பைக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஏற்கனவே 2022இல் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார். மார்க்ராம், டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் பேட்டிங்கில் வலு சேர்க்கின்றனர்.

பந்துவீச்சில் மார்கோ ஜான்சன் மற்றும் ஜெரால்ட் கோட்ஸியின் ஆதரவுடன் ககிசோ ரபாடா மற்றும் நார்ட்ஜே வழிநடத்துவார்கள். பிஜோர்ன் ஃபோர்டுயின், கேசவ் மகாராஜ் மற்றும் தப்ரைஸ் ஷம்சி ஆகியோர் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களாக இருப்பார்கள்.

தென்னாப்பிரிக்கா அணி: எய்டன் மார்க்ரம் (கேப்டன்), ஒட்னியல் பார்ட்மேன், ஜெரால்ட் கோட்ஸி, குயின்டன் டி காக், ஜார்ன் ஃபோர்டுயின், ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மகராஜ், டேவிட் மில்லர், அன்ரிச் நார்ட்ஜே, ககிசோ ரபாடா, ரியான் ரைசல்டன், ரியான் ரைசல்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ்.

The post டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட அணியை அறிவித்தது தென்னாப்பிரிக்கா appeared first on Dinakaran.

Related Stories: