சாதி, மதம் என்றிருந்த அரசியல் பாணியை வளர்ச்சியை நோக்கியதாக பிரதமர் மோடி மாற்றியுள்ளார்: பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா புகழாரம்

சத்தீஸ்கர்: சாதி, மதம் என்றிருந்த அரசியல் பாணியை வளர்ச்சியை நோக்கியதாக பிரதமர் மோடி மாற்றியுள்ளார் என்று ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். முங்கேலியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா பேசுகையில், “இந்தியக் கூட்டணி என்பது இரண்டு விஷயங்களின் கூட்டணி. முதலில் குடும்பத்தைக் காப்பவர்கள், இரண்டாவதாக ஊழல்வாதிகளைப் பாதுகாப்பவர்கள். ஊழலை ஒழிப்பது குறித்து பிரதமர் மோடி பேசினார். ஊழல்வாதிகளை பாதுகாப்பது பற்றி பேசுகிறார்கள்… இந்திய கூட்டணியின் தலைவர்கள் ஜாமீனில் அல்லது சிறையில் உள்ளனர். காங்கிரஸ் கட்சி எப்போதுமே ராமர், சனாதனத்துக்கு எதிரானது.

நீங்கள் நீதிமன்றத்தில் ஸ்ரீராமர் ஒரு கற்பனை உருவம் என்று கூறியபோது UPA ஆட்சியில் காங்கிரஸ் கட்சி இல்லையா, மன்மோகன் சிங் பிரதமராக இல்லையா?, சோனியா காந்தி தலைவராக இல்லையா? என்று கேள்வி எழுப்பினார். ஸ்ரீராமருக்கு வரலாற்று இருப்பு கிடையாது, இதற்காக கோர்ட்டில் பிரமாண பத்திரம் கொடுத்துள்ளீர்கள். ‘சேது’ விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை நீர்த்துப் போகச் செய்துவிட்டீர்கள். தீர்ப்பு வந்தால் பிஜேபிக்கு சாதகமாக இருக்கும் என கோர்ட்டில் உங்கள் வக்கீல் தீர்ப்பு தேதியை நீட்டிக்க சொன்னது சரி இல்லையா? என்று ஜேபி நட்டா சாடினார்.

தொடர்ந்து பேசிய அவர், 2019ல் நிலையான ஆட்சியைக் கொடுத்தீர்கள், அதன் விளைவாக… ஜம்மு-காஷ்மீரில் இருந்து 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது. ஜனவரி 22 அன்று, அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவிலின் பிரான் பிரதிஷ்டை நடந்தது. நாட்டின் முஸ்லிம் பெண்கள் முத்தலாக் எனும் தீய பழக்கத்திலிருந்து விடுபட்டுள்ளனர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து வரும் இந்து, சீக்கியர், புத்த, ஜெயின், கிறிஸ்தவ மற்றும் பார்சி மதங்களைச் சேர்ந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

ஒரு காலத்தில் இந்திரா ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஒரு பஞ்சாயத்தில் இரண்டு வீடுகள் மட்டுமே கிடைத்தன. இன்று, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 4 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. வரும் ஐந்தாண்டுகளில் மேலும் 3 கோடி வீடுகள் கட்டித் தரப்படும், இதனால் ஏழைகள் யாரும் வீடு இல்லாமல் இருக்க மாட்டார்கள். இது மோடியின் உத்தரவாதம் என குறிப்பிட்டார்.

The post சாதி, மதம் என்றிருந்த அரசியல் பாணியை வளர்ச்சியை நோக்கியதாக பிரதமர் மோடி மாற்றியுள்ளார்: பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா புகழாரம் appeared first on Dinakaran.

Related Stories: