திருப்புத்தூர் அருகே கண்மாயில் மீன்பிடி திருவிழா; வகை, வகையான மீன்களை அள்ளி சென்றனர்

திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே வள்ளி கண்மாயில் மீன்பிடித் திருவிழா நேற்று நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் பகுதிகளில் கோடைக்காலத்தில் நீர் வற்றும் சூழலில் மீன்பிடி திருவிழா நடத்துவது வழக்கம். நேற்று துவார் கிராமத்தில் உள்ள வள்ளி கண்மாயில் நேற்று மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. விழாவில் துவார், பூலாங்குறிச்சி, நெற்குப்பை, செவ்வூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

குளக்கரையில் உள்ள வள்ளி லிங்க சுவாமியை வழிபட்ட பின், ஊர் பெரியவர்கள் மீன்பிடி திருவிழாவை, வெள்ளை விடுதல் எனப்படும் வெள்ளைக்கொடி அசைத்து துவக்கி வைத்தனர். அதன்பின் பொதுமக்கள் மின்னல் வேகத்தில் துள்ளிக் குதித்து ஓடி சென்று பாரம்பரிய முறையில் ஊத்தா, வலை, பரி, கச்சா, தூரி ஆகிய மீன்பிடி உபகரணங்களை கொண்டு மீன்களைப் பிடித்தனர்.

இதில் நாட்டு வகை மீன்களான சிசி, போட்லா, கட்லா, விரால், ஜிலேபி, அயிரை, கெண்டை, கெழுத்தி உள்ளிட்ட வகை வகையான மீன்களை சாக்குப்பை, கூடை மற்றும் பாத்திரங்களில் அள்ளிச் சென்றனர். 3 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடந்த மீன்பிடித் திருவிழாவை, ஜாதி, மதம் பாராமல் அனைவரும் ஒன்று கூடி ஒற்றுமையுடன் நடத்தினர்.

The post திருப்புத்தூர் அருகே கண்மாயில் மீன்பிடி திருவிழா; வகை, வகையான மீன்களை அள்ளி சென்றனர் appeared first on Dinakaran.

Related Stories: