கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம்: அமைச்சர்கள் குழு முதலமைச்சருடன் இன்று சந்திப்பு

சென்னை: கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தை நேரில் ஆய்வு செய்த அமைச்சர்கள் குழு இன்று முதலமைச்சரை சந்திக்கிறது. கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் குடித்து 43 பேர் பலியான சம்பவத்தில் முழுமையாக விசாரணை நடத்த நீதி விசாரணைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், இதற்கான அனைத்து காரணிகளை கண்டறியவும், எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பி.கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்க உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று கள்ளக்குறிச்சியில் ஆய்வு செய்தனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தை நேரில் ஆய்வு செய்த அமைச்சர்கள் குழு இன்று முதலமைச்சரை சந்திக்கிறது. கள்ளக்குறிச்சியில் தற்போதைய நிலவரம் வழங்கப்படக் கூடிய சிகிச்சைகள் உள்ளிட்டவை குறித்து முதலமைச்சரிடம் எடுத்து கூற உள்ளனர். சட்டப்பேரவை கூடும் முன்பு 3 அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் | முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் உள்பட பல்வேறு கட்சி உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இன்று கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளனர். சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவான பதிலளிப்பார் என எதிர்பார்க்கபப்டுகிறது.

The post கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம்: அமைச்சர்கள் குழு முதலமைச்சருடன் இன்று சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: