கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது தேர்தல் ஆணையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புகார்..!!

கோவை: கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது தேர்தல் ஆணையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புகார் அளித்துள்ளது . மக்களவை தேர்தல் (ஏப்ரல்) 19-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடக்கிறது. இதற்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் கடந்த 16-ந் தேதி வெளியிட்டது. அன்று முதலே நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

இந்த விதிகள் தீவிரமாக பின்பற்றப்படும் என கூறிய தேர்தல் கமிஷன், நடத்தை விதிமீறலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்தது. இந்நிலையில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் தேர்தல் நடத்தை விதிகளை முற்றிலும் நிராகரித்து வருகிறார். கடந்த 12.04.2024 ஆம் தேதி இரவு 10 மணிக்கு மேல் ஆவாரம்பாளையம் பகுதியில் ஒலிபெருக்கியில் வாக்கு சேகரித்துள்ளார்.

பாதுகாப்பு பணிக்கு சென்ற காவலர்கள் மௌன சாட்சியாக கடந்து சென்றுள்ளனர். தேர்தல் நடத்தை விதிகளை மதிக்காமல் தொடர்ந்து மீறி செயல்பட்டு வரும் தமிழ்நாடு பாஜக தலைவர்  அண்ணாமலையின் அத்துமீறல் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுக் கேட்டுக் கொள்கிறது.

The post கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது தேர்தல் ஆணையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புகார்..!! appeared first on Dinakaran.

Related Stories: