ஆந்திர மாநில தேர்தலில் மதுபானம் ஆறாக ஓடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

*தெலுங்கு தேசம் கட்சி மாநில செயலாளர் கோரிக்கை

திருப்பதி : ஆந்திர மாநில தேர்தலில் மதுபானம் ஆறாக ஓடுகிறது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க தெலுங்கு தேசம் மாநில செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பதியில் தெலுங்கு தேசம் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் ரவி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது: ஆந்திர மாநிலத்தில் மதுவுக்கு அடிமை ஆகி இளைஞர்களின் வாழ்க்கையை சீரழித்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தற்போது தேர்தல் நேரத்தில் மதுவை கொண்டு இளைஞர்களை மது பிரியர்களை தன் பக்கம் இருக்க முழு முயற்சி செய்து வருகிறது.

தரமற்ற மதுவால் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. ஒய் ஆர் காங்கிரஸ் கட்சியினர் மொத்தமாக மதுபானத்தை வாங்கி பதுக்கி வைத்துள்ளனர். மாநிலத்தில் தேர்தல் ஆணையம் மதுக்கடைகள் மீது சிறப்பு கவனம் செலுத்தி கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் மாநிலத்தில் தரமற்ற மதுபானங்கள் விற்பனை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post ஆந்திர மாநில தேர்தலில் மதுபானம் ஆறாக ஓடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: