மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பேலட் பேப்பர் பொருத்தும் பணி இன்று துவக்கம்

 

ஈரோடு, ஏப்.10: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர், சின்னம் அடங்கிய பேலட் பேப்பர் பொருத்தும் பணி இன்று துவங்குகிறது. இதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளதால், தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் பயன்படுத்தக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், அதற்கான கட்டுப்பாட்டு கருவிகளும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் வி.வி.பேட் கருவிகளும் அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. அதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாநகராட்சி அலுவலகத்திலும், ஈரோடு மேற்கு தொகுதிக்கான இயந்திரங்கள் ஈரோடு தாலுகா அலுவலகத்திலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி இன்று தொடங்குகிறது. இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் நேற்று தீவிரப்படுத்தப்பட்டது. ஈரோடு தாலுகா அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி நடக்கும் இடத்தை சுற்றிலும் பொதுமக்கள் நுழைய முடியாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.

மேலும், தாலுகா அலுவலகத்தின் நுழைவு வாயில் பகுதியில் ஒருவர் மட்டுமே உள்ளே நுழையும் வகையில் சிறிய நுழைவு வாயில் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. வெளிநபர்கள் உள்ளே அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

The post மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பேலட் பேப்பர் பொருத்தும் பணி இன்று துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: