நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் புகைப்படத்துடன் வாக்காளர் பட்டியல் வெளியீடு: கலெக்டர் வெளியிட்டார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதனை, கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டார்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், நடக்க உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு வாரியான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை, மாவட்ட தேர்தல் அலுவலர்  மற்றும் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட காஞ்சிபுரம் மாநகராட்சி இணை இயக்குநர் மற்றும் ஆணையாளர் நாராயணன் பெற்றுக்கொண்டார்.அப்போது கலெக்டர் ஆர்த்தி, செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள சட்டமன்றத் தொகுதி வாரியான வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கொண்டு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகளுக்கு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.இதையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சி, வாலாஜாபாத், உத்திரமேரூர், பெரும்புதூர் ஆகிய பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 287 வாக்குச்சாவடிகளில், 120 ஆண்களுக்கான வாக்குச்சாவடிகளும், 120 பெண்களுக்கான வாக்குச்சாவடிகளும், 47 அனைத்து வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது.அதன்படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆண்கள் 1,33,124, பெண்கள் 1,42,691, 32 திருநங்கைகள் என மொத்தம் 2,75,847 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் செய்யப்படும் இறுதிநாள் வரை வாக்காளர் பட்டியலில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பான விவரங்கள் வருவாய்த் துறையினரிடம் இருந்து பெறப்பட்டு மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். இந்த தேர்தல் பணியில் சுமார் 1,300 அலுவலர்கள் ஈடுபட உள்ளனர் என்றார்.கலெக்டரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சித் தேர்தல்) ஸ்டீபன் ஜெயச்சந்திரா, வட்டார வளர்ச்சி அலுவலர் (தேர்தல்) தினகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்….

The post நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் புகைப்படத்துடன் வாக்காளர் பட்டியல் வெளியீடு: கலெக்டர் வெளியிட்டார் appeared first on Dinakaran.

Related Stories: