முன்னாள் ஒன்றிய அமைச்சரும், மூத்த தலைவருமான பிரேந்தர் சிங் பாஜகவில் இருந்து விலகல்; பாஜக மேலிடம் அதிர்ச்சி!

டெல்லி: முன்னாள் ஒன்றிய அமைச்சரும், மூத்த தலைவருமான பிரேந்தர் சிங் பாஜகவில் இருந்து விலகியுள்ளார். பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக முன்னாள் ஒன்றிய அமைச்சர் பிரேந்தர் சிங் அறிவித்துள்ளார். அண்மையில் பிரேந்தர் சிங்கின் மகன் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். மூத்த தலைவர்கள் பலரும் கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்து வருவதால் பாஜக மேலிடம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

மேலும், அவர் தனது அரசியல் பயணத்தை காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து தொடரப்போவதாக அறிவித்துள்ளார். தனது அரசியல் வாழ்க்கையில் 40 ஆண்டு காலம் காங்கிரஸ் கட்சியில் இருந்து பணியாற்றி வந்த ஹரியாணாவை சேர்ந்த பிரேந்தர் சிங், கடந்த 2014-ம் ஆண்டு பாஜகவின் அப்போதைய தேசியத் தலைவர் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இந்நிலையில், தற்போது மீண்டும் காங்கிரஸில் ஐக்கியமாகப் போவதாய் பிரேந்தர் சிங் அறிவித்துள்ளார்.

பிரேந்தர் சிங்கின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜேந்தர் சிங் கடந்த மார்ச் 10-ம் தேதி பாஜகவிலிருந்து விலகி, காங்கிரஸில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கணட தலைவர்கள் இருவரும், நாடு தழுவிய விவசாயிகள் போராட்டத்தின்போது, அவர்களுக்கு ஆதரவாக வேளாண் சட்டங்களை எதிர்த்து குரல் கொடுத்தனர் என்பதும் தொடர்ச்சியாக பல்வேறு விவகாரங்களில் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

The post முன்னாள் ஒன்றிய அமைச்சரும், மூத்த தலைவருமான பிரேந்தர் சிங் பாஜகவில் இருந்து விலகல்; பாஜக மேலிடம் அதிர்ச்சி! appeared first on Dinakaran.

Related Stories: