விபத்தில் லாரி எரிந்து கொண்டிருந்த போது தீயிக்கு நடுவே ‘பீர்’ பாட்டில்களை சேகரித்த மக்கள்: மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி

கார்கோன்: மத்திய பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டம் பிகன்கான் அடுத்த இந்தூர்-இச்சாபூர் மாநில நெடுஞ்சாலையின் வழியாக மதுபானமான ‘பீர்’ லோடு ஏற்றிக் கொண்டு மினி லாரி சென்றது. அந்த லாரி தேஷ்கான் என்ற இடத்தில் எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அடுத்த சில நொடிகளில் உரிசிக் கொண்டே சென்ற அந்த லாரி தீப்பிடித்தது. மேலும், சாலையில் பீர் பாட்டில் பெட்டிகளும் சிதறின.

லாரிக்குள் சிக்கியிருந்த டிரைவர், உடனடியாக கேபினை திறந்து உயிர் தப்பினார். கொழுந்துவிட்டு எரிந்த தீயினால், பெட்டிகளில் இருந்த பீர் பாட்டில்கள் வெடிக்கத் தொடங்கின. இச்சம்பவத்தால் நான்கு வழிச்சாலையில் சென்ற பயணிகள் சிலர், தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு பீர் பாட்டில்களை எடுக்க தொடங்கினர். செல்போன் வெளிச்சத்தில் சிலர் பீர் பாட்டில்களை எடுத்து சென்றனர்.

தகவலறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார், தீ மேலும் பரவாமல் தடுத்தனர். பின்னர் மீதமான பீர் பாட்டில்களை வேறு லாரியில் ஏற்றிச் சென்றனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post விபத்தில் லாரி எரிந்து கொண்டிருந்த போது தீயிக்கு நடுவே ‘பீர்’ பாட்டில்களை சேகரித்த மக்கள்: மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: