தேர்தல் ஆணையம் பாஜவின் கூட்டணி: அமைச்சர் ரகுபதி காட்டம்

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் திருச்சி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோவின் தீப்பெட்டி சின்னத்தை அமைச்சர் ரகுபதி அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஒன்றிய அரசை அகற்ற வேண்டும் என்பதிலும் இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்திய வாக்காளர்களும் தமிழ்நாடு வாக்காளர்களும் உள்ளனர். ஓபிஎஸ் தேனியில் ரூ.2000 கொடுத்தார். இங்கு 5000 கொடுத்தாலும் டெபாசிட் வாங்க போவதில்லை. ஏதோ நமது மக்களுக்கு அவர் அடித்து வைத்துள்ள பணம் கிடைக்கிறது. அதை மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொள்ளட்டும். நிர்மலா சீதாராமனுக்கு மாதமாதம் ஊதியம் வருகிறது. அந்த ஊதியத்தில் அவர்களது செலவு போக மீதிதொகையை சேர்த்து வைத்திருந்தாலே இந்த தேர்தலை சந்தித்து இருக்கலாம். அதனால் அவர் சொல்வது பச்சை பொய். தேர்தல் ஆணையம் பாஜவின் இன்னொரு கூட்டணி. சிபிஐ, ஈடி வருமானவரித்துறையுடன் கூட்டணி சேர்ந்துதான் பாஜ நிற்கிறது. என்ன வேண்டுமென்றாலும் அவர்கள் செய்யட்டும். எல்லாம் ஜூன் 4ம் தேதி வரை மட்டும்தான். அதற்கு அப்புறம் அனைத்தும் தவிடுபொடியாகிவிடும். இவ்வாறு அவர் கூறினார்.

* ‘ஈடி என்ன செய்வார்கள் என்று விஜயபாஸ்கருக்கும் தெரியும்’
அமைச்சர் ரகுபதி கூறுகையில், ‘முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர், 2 எச்பி மோட்டார் எங்களிடம் உள்ளது. அதனால் ஆறு இடங்களிலும் 2 எச்பி மோட்டார்களை இறக்கி தண்ணீர் எடுத்து வெற்றி அடைந்து விடுவோம் என பேசியுள்ளார். ஆனால் அங்கு பீசை ஈடி பிடுங்கிவிட்டது. டூப்ளிகேட் பீசை போட்டார்கள் என்றால் ஈடி திரும்ப வந்து என்ன செய்வார்கள் என்பது தெரியும். அது விஜயபாஸ்கருக்கும் புரியும்’ என்றார்.

The post தேர்தல் ஆணையம் பாஜவின் கூட்டணி: அமைச்சர் ரகுபதி காட்டம் appeared first on Dinakaran.

Related Stories: