பெண்ணுக்கு பாலியல் தொல்லை தேர்தல் பணியில் இருந்து பிஎஸ்எப் வீரர் அகற்றம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை

கொல்கத்தா: பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவரை தேர்தல் பணியில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. மேற்கு வங்கத்தில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடக்கிறது. ஏற்கனவே 4 கட்ட தேர்தல் முடிந்த நிலையில் நேற்று மாநிலத்தில் உள்ள 7 தொகுதிகளுக்கு நேற்று 5ம் கட்ட தேர்தல் நடந்தது. இந்நிலையில் நேற்று தேர்தல் நடந்த உலுபெரியா மக்களவை தொகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த எல்லை பாதுகாப்பு படை(பிஎஸ்எப்) வீரர் பாலியல் தொல்லை அளித்ததாக ஒரு பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து குறிப்பிட்ட பிஎஸ்எப் வீரர் தேர்தல் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். காவல் துறையிடம் இருந்து அறிக்கை பெற்ற பின்னர் பாதுகாப்பு வீரர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

The post பெண்ணுக்கு பாலியல் தொல்லை தேர்தல் பணியில் இருந்து பிஎஸ்எப் வீரர் அகற்றம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: