2019ல் மொத்தமா வரும்போதே 39ல் வெற்றி; இப்போ சிதறிப்போன கூட்டணியை ஜெயிப்பது சில்லரை விஷயம்: கே.பாலகிருஷ்ணன் போட்டுத்தாக்கு

சங்கரன்கோவில்: இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் தென்காசி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் ராணி குமாரை ஆதரித்து மார்க்சிஸ்ட் சார்பில் சங்கரன்கோவிலில் பொதுக்கூட்டம் நடந்தது.

இதில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசியதாவது: இந்தியா கூட்டணி என்ற வலுவான கூட்டணி கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து வலுவான கூட்டணியாக பயணித்து வருகிறது. தென்காசியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ராணி குமார் உறுதியாக வெற்றி பெறுவார் என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்று. இந்தியா கூட்டணி 2019 நாடாளுமன்ற தேர்தலிலேயே பெரிய அணியை எதிர்த்து போட்டியிட்டு 39 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். அப்போது ஒன்றாக நம்மை எதிர்த்த பாஜக – அதிமுக கூட்டணி தற்போது தனித்தனியாக போட்டியிடுகிறது.

2024 தேர்தலில் அந்த பெரிய அணி சிதறு தேங்காய் போல உடைந்து கிடக்கிறது. அதிமுக பல அணியாக உடைந்து கிடக்கிறது. அதற்குள்ளேயே ஒரு கூட்டணி வைக்கும் அளவுக்கு அதிமுக இருக்கிறது. அதனால், வரும் தேர்தலில் 40 தொகுதிகளில் திமுக கூட்டணியின் வெற்றி ஒன்றும் பெரிய விஷயமில்லை. ஒன்றிய அரசில் இந்தியாவில் பல்வேறு துறைகள் இருந்தாலும் இரண்டு துறைகள் மட்டும் தான் தற்போது வரை தீவிரமாக வேலை செய்து கொண்டிருக்கிறது. அதில் ஒன்று அமலாக்கதுறை, மற்றொன்று வருமான வரித்துறை. எதிர்க்கட்சிகளை இந்த துறைகள் மூலம் ஒன்றிய அரசு எப்படியாவது அழித்து விடலாம் என்று கனவு காண்கிறது. அது வெறும் பகல் கனவு.
இவ்வாறு அவர் பேசினார்.

The post 2019ல் மொத்தமா வரும்போதே 39ல் வெற்றி; இப்போ சிதறிப்போன கூட்டணியை ஜெயிப்பது சில்லரை விஷயம்: கே.பாலகிருஷ்ணன் போட்டுத்தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: