பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க கொடி அணிவகுப்பு விழிப்புணர்வு பேரணி

 

நீடாமங்கலம், மார்ச் 27: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், அவர்களது பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும் போலீசார், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் இணைந்து டிஎஸ்பி அஸ்வத் ஆன்டோ ஆரோக்கிய ராஜ் தலைமையில் நீடாமங்கலத்தில் நேற்று முன்தினம் மாலை கொடி அணிவகுப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தினர். 18 வது நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதியன்று தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக நடக்கிறது.

இதையடுத்து தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அதில் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட நீடாமங்கலம் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், அவர்களது பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும் போலீசார், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் இணைந்து மன்னார்குடி டி.எஸ்.பி அஸ்வத் ஆன்டோ ஆரோக்கியராஜ் தலைமையில் நேற்று முன்தினம் மாலை கொடி அணிவகுப்பு விழிப்புணர்வு நடத்தினர்.

நீடாமங்கலம் தஞ்சை சாலையில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையம் அருகில் துவங்கிய அணிவகுப்பு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பெரியார் சிலை அருகே நிறைவடைந்தது. பேரணியில் டிஎஸ்பி அஸ்வத் ஆன்டோ ஆரோக்கியராஜ், டெல்லி மத்திய தொழில் பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் மனிஷ் செளத்திரி, நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ் பெக்டர் ராஜேஷ், பரவாக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாநிதி, எஸ்.ஐகள் பாலமுருகன், சந்தோஷ்குமார், விஜயகுமார், பிரபு, ஸ்ரீநிதி மற்றும் பயிற்சி உதவி ஆய்வாளரககள், போக்குவரத்து காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க கொடி அணிவகுப்பு விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Related Stories: