கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது

சிவகாசி, பிப். 26: சிவகாசி அருகே கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார். சிவகாசி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளி முடிந்து வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் அதே பகுதியில் வசித்து வரும் சித்தப்பா முறை கொண்ட முருகன்(46) என்பவர் வீட்டிற்குள் அத்துமீறி புகுந்து தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

முருகனை தட்டி விட்டு, சிறுமி வெளியே ஓடி வந்து தனக்கு நடந்த சம்பவம் குறித்து அதே பகுதியில் உள்ள உறவுக்கார பெண்ணிடம் கூறி அழுதுள்ளார். இது குறித்து சிறுமியின் தாய் சிவகாசி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் கட்டிட தொழிலாளி முருகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Related Stories: