அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குட்டைகளுக்கு நீர் நிரப்ப ஆர்ப்பாட்டம்

அவிநாசி, பிப். 26: அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்ப கோரி அத்திக்கடவு அவிநாசி திட்ட போராட்டக்குழுவினர் அவிநாசியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. இந்த போராட்டத்தில் அத்திக்கடவு. அவிநாசி திட்டத்தில் விடுபட்ட 1400 குளம், குட்டைகளுக்கு உடனடியாக தண்ணீர் திறந்து விட அரசு அரசாணை வெளியிட வேண்டும்.

மேலும், இதற்கான திட்ட அறிக்கை தயார் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், திட்டம் பயன் பெறும் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள், அனைத்து கட்சியினர், சமூக ஆர்வலர்கள் என 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

 

 

Related Stories: