திருமங்கலம் அருகேயுள்ள ஏ.வலையபட்டியை சேர்ந்தவர்கள் மாசாணம்(24), குமரவேல்(24). இவர்கள் இருவரும் ஒரு அடிதடி வழக்கில் நேற்று முன்தினம் திருமங்கலம் கோர்ட்டில் ஆஜராகிவிட்டு மீண்டும் டூவீலரில் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். திருமங்கலம் – உசிலம்பட்டி ரோட்டில் சாத்தங்குடி விலக்கு அருகே சென்ற போது அங்குள்ள பாலத்தில் டூவீலர் மோதிய விபத்தில், சம்பவ இடத்திலேயே மாசாணம் உயிரிழந்தார்.
படுகாயமடைந்து உயிருக்கு போராடிய குமரவேலை அப்பகுதியில் இருந்தோர் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று குமரவேல் உயிரிழந்தார். திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
