மதுரை, மேலப்பனங்காடியை சேர்ந்தவர் மலைச்சாமி(49). பிளம்பர். இவரது மனைவி முத்துப்பிள்ளை(37). இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதற்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை.
இதனால் வேதனையடைந்த அவர் கடந்த பிப்.20 அன்று வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் அலறிய அவரை அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் உதவியுடன் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் முத்துப்பிள்ளை உயிரிழந்தார். இதுகுறித்து கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
