ஈரோட்டில் இடியுடன் கனமழை

ஈரோடு, பிப்.26: ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பகல் நேரத்தில் வெயில் கொளுத்தும் நிலையில் நேற்று இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்தது. சுமார் 30 நிமிடத்திற்கு மேலாக இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியது. சில இடங்களில் மின் தடை ஏற்பட்டது. இரவில் திடீரென பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

 

Related Stories: