கெஜ்ரிவாலை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்: கலைந்து செல்ல மறுத்த ஆம் ஆத்மி கட்சியினர் குண்டுகட்டாக கைது

டெல்லி: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை உடனடியாக விடுதலை செய்ய கோரி ஆர்ப்பாட்டத்தில் ஆம் ஆத்மீ கட்சியினரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பிரதமர் நரேந்திர மோடியின் இதை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த ஆம் ஆத்மீ திட்டமிட்டிருந்தது. இதை அடுத்து டெல்லியின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு காவல் படை குவிக்கப்பட்டது.

பிரதமர் மோடி இல்லம் நோக்கி செல்லும் சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்திய காவல் துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். பாதுகாப்பு காரணங்களுக்காக மெட்ரோ நிலையங்களில் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் மூடப்பட்டன. ஆனால் தடைகளை மீறி ஆம் ஆத்மீ கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள், முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. பட்டேல் சக் மெட்ரோ ரயில்நிலையத்திற்கு வெளியே கூடிய ஆம் ஆத்மி தொண்டர்களை கலைந்து செல்லுமாறு காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.

அனால் அவர்கள் களைந்து செல்ல மறுத்ததை அடுத்து காவல் துறையினர் அவர்களை கைது செய்து இழுத்து சென்றனர். இதனால் பட்டேல் சக் பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. பிரதமர் இல்லம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மீ கட்சகியினரும் குண்டுக்கட்டாக அகற்றப்பட்டன. இதனிடையே அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக டெல்லி ஐடிஓ பகுதியில் பாரதீய ஜனதா கட்சியினர் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கெஜ்ரிவால் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலை விடுதலை செய்யக்கோரி ஆம் ஆத்மீ கட்சியினரின் போராட்டம். கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய வலியுறுத்தி பாஜகவினரின் ஆர்ப்பாட்டம் ஆகியவற்றால் டெல்லி முழுவதும் இன்று காலை முதல் மதியம் வரை பெறும் பரபரப்பு நிலவியது. காலால் கொள்கையுடன் தொடர்புடைய பண மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள கெஜ்ரிவால் தற்போது அமலாக்கத்துறை காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

The post கெஜ்ரிவாலை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்: கலைந்து செல்ல மறுத்த ஆம் ஆத்மி கட்சியினர் குண்டுகட்டாக கைது appeared first on Dinakaran.

Related Stories: