போதைப்பொருள் கடத்தலில் பாஜ, தெலுங்கு தேசம் கட்சிக்கு தொடர்பு: பிரச்னை கிளப்புகிறது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்

திருமலை:விசாகப்பட்டினம் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தெலுங்கு தேசம் கட்சிக்கும், பாஜ மாநில தலைவர் புரந்தேஸ்வரிக்கும் தொடர்பு உள்ளது என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் சஜ்ஜலா ராமகிருஷ்ணா குற்றம் சாட்டினார். அவர் கூறியதாவது: விசாகப்பட்டினம் துறைமுகத்தில் மத்திய புலனாய்வு பிரிவு போலீசார் போதைப் பொருளை கைப்பற்றி உள்ளனர். ஆனால், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு மற்றும் அவரது மகன் லோகேஷ் ஆகியோர் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு எடுத்துக் கொண்டதில் இருந்தே விமர்சிக்கத் தொடங்கினர்.

உண்மையில் அவர்களுக்கும் இந்த வழக்குகளுக்கும் அதிக தொடர்பு உள்ளது. அந்த நிறுவனத்துடன் பாஜக மாநில தலைவரும் சந்திரபாபுவின் மைத்துனியுமான புரந்தேஸ்வரி மகன் மற்றும் உறவினர்களுக்கு தொடர்பு உள்ளது. ஆனால் சந்திரபாபு அதனை மறைக்க சம்மந்தம் இல்லாமல் அரசு மீது வீண் பழி சுமத்தும் விதமாக சி.பி.ஐ.விசாரனைக்கு அரசு தடையாக இருப்பதாக கூறுகிறார்.

போதைப்பொருள் குறித்த உண்மையைக் கண்டறிய சிபிஐக்கு கடிதம் எழுத உள்ளோம். மேலும் போதைப்பொருள் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post போதைப்பொருள் கடத்தலில் பாஜ, தெலுங்கு தேசம் கட்சிக்கு தொடர்பு: பிரச்னை கிளப்புகிறது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் appeared first on Dinakaran.

Related Stories: