ஈரோடு: ஈரோடு வில்லரசம்பட்டியில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியில், தமிழருவி மணியன் தலைமையிலான காமராஜர் மக்கள் கட்சியை இணைக்கும் விழா நேற்று நடைபெற்றது. தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தலைமை வகித்து, தமிழருவி மணியன் மற்றும் காமராஜர் மக்கள் கட்சியினருக்கு வேல் வழங்கி, தமாகாவில் இணைத்தார். தொடர்ந்து, நடந்த நிகழ்ச்சியில் ஜி.கே.வாசன் பேசுகையில், ‘தமிழருவி மணியன் கட்சி தமாகவுடன் இணைப்பு யானை பலமாக இருக்கும். முத்து உடன் மாணிக்கம் சேர்வது போல தமாகாவுடன் காமராஜர் மக்கள் கட்சி இணைவது தங்கத்துடன் வைரம் சேர்வது போல இருக்கிறது. இனி தமாகாவுக்கு வசந்த காலம்’ என்றார். தமாகாவில் இணைந்த பின் தமிழருவி மணியன் பேசுகையில், ‘காமராஜர் எனக்கு தமிழருவி என பெயர் சூட்டினார். மூப்பனார் என்னை நீர் வீழ்ச்சி என்பார். முதல் தலைமுறையினர் விஜய் பின் வருகிறார்கள். இதை வைத்து கொண்டு முதல்வராக முடியாது. ஆட்சியை பிடிக்க முடியாது. நீங்கள் வாழ்வற்று போவீர்கள். தான் முதல்வராக வர வேண்டும் என்ற எண்ணத்தை சிந்தனையில் உதறிவிட்டு, விஜய் தமாகா கூட்டணிக்கு வர வேண்டும்’ என்றார்.
தமாகா- காமக இணைப்பு யானை பலம் என வாசன் புல்லரிப்பு
- வாசன்
- டமாகா
- கமக்
- ஈரோடு
- தமிழ் மாநில காங்கிரசு கட்சி
- தமிழருவி மணியன்
- காமராஜ் மக்கல் கட்சி
- Villarasampatti
- ஜி. வாசன்
