புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நாங்கள் தீய சக்தி, தூய சக்தி என எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டோம். எங்களிடம் இருப்பது மக்கள் சக்தி. விஜய்க்கு மக்கள் சக்தியை பற்றி தெரியாது. சினிமா வசனமாக தீய சக்தி, தூய சக்தி என்று கூறுகிறார். மக்கள் சக்தி எங்களிடம் இருக்கிறது. விஜய்க்கு சிலப்பதிகாரமும் தெரியாது, ஒன்றும் தெரியாது. எழுதி கொடுத்தவர்களுக்கு தான் தெரியும். அவரிடம் தான் கேட்க வேண்டும் நாம். பெரியாரை, கொள்கை தலைவராக விஜய் ஏற்றுக்கொண்டபோது திராவிடத்தை ஏற்றுக்கொண்டுள்ளார் என்றுதான் அர்த்தம். பாஜவின் சி டீமாக இருக்க கூடிய விஜய் அதை மறைக்கலாம். ஒன்று மட்டும் உண்மை, அவரை பொறுத்தவரை எந்த காலத்திலும் அவர் நினைப்பது நடக்காது. 6மாதம் நடித்துவிட்டு முதலமைச்சராவது எல்லாம் சினிமாவில் நடக்கும். அரசியலில் உண்மையில் நடக்காது. விக்கிரவாண்டி உள்ளிட்ட இடைத்தேர்தலில் புறமிட்டு ஓடிவிட்டார். தேர்தலை கண்டு கொள்ளவில்லை. விஜய் எந்த காலத்திலும் எம்ஜிஆராக முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
