பாஜக தோல்வி பயத்தில் வெறிகொண்டு செயல்படுகிறது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி

சென்னை: பாஜக தோல்வி பயத்தில் வெறிகொண்டு செயல்படுகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் கமல்ஹாசனை நேரில் சந்தித்த கே.பாலகிருஷ்ணன் தங்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 40 தொகுதிகளுக்கும் பிரச்சாரம் செய்வதாக மநீம கட்சி தலைவர் தெரிவித்ததாகவும். அதற்கான பட்டியல் தயாரிப்பதாகவும், விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார். இந்நிலையில் மநீம கட்சி தலைவர் கமல்ஹாசனை சந்தித்த பின் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

*கெஜ்ரிவால் மீதான கைது நடவடிக்கைகள் எல்லாம் பாஜவினர் தங்களுக்கு தாங்களே தோண்டிக்கொள்ளும் குழி

*நாட்டு மக்கள் கோபம் பாஜகவுக்கு எதிரான கோபமாக உருவெடுத்து தேர்தலில் மாபெரும் தோல்வி ஏற்படும்.

*பாஜக தோல்வி பயத்தில் வெறிகொண்டு செயல்படுகிறது.

*பிரதமர் மோடி தேர்தல் அடிப்படை விதிமுறைகளை மீறப்பட்டுள்ளது.

*கோவை பள்ளி மாணவர்களை யூனிபார்ம் உடன் எப்படி பரப்புரை கூட்டத்தில் பங்கேற்க வைத்தனர்.

*பாஜக கூட்டம் நடத்த ஆல் இல்லாத காரணத்தினால், மாணவ மாணவிகளை கொண்டு செல்வது தேர்தல் விதிமுறையா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

*சேலத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியது எப்படி தேர்தல் விதிமுறைகளுக்கு ஒப்பாகும்.

*இந்து மக்களுக்கும், இதர மதத்தினருக்கும் மோதலை ஏற்படுத்தும் வகையில் பிரதமர் பேசுவது தேர்தல்விதிமுறைகளை மீறிய செயல்.

The post பாஜக தோல்வி பயத்தில் வெறிகொண்டு செயல்படுகிறது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: