‘கடிகாரம்’ சின்னம் பயன்படுத்த அஜித் பவார் தரப்புக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டது. அஜித் பவார் கட்சியிலிருந்து பிரிந்து பாஜவுடன் கூட்டணி சேர்ந்து துணை முதல்வரானார்.கட்சி, சின்னத்தை அவருக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அஜித் பவார் தரப்பினர் ‘கடிகாரம்’ சின்னத்தை பயன்படுத்துவதை தடுக்கக் கோரி சரத் பவார் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவில், ‘‘மனுதாரர் தேசியவாத காங்கிரஸ் கட்சி சரத் சந்திர பவார்’ என்ற பெயரையும், ‘துர்ஹா ஊதும் மனிதன்’ சின்னத்தையும் வரும் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் பயன்படுத்தலாம். அந்த சின்னத்தை வேறு எந்த கட்சிக்கும், சுயேச்சைக்கும் தேர்தல் ஆணையம் ஒதுக்கக் கூடாது. அதே சமயம், ‘கடிகாரம்’ சின்னம் நீதிமன்ற விசாரணையில் தீர்க்கப்படாமல் உள்ளது, நீதிமன்றத்தின் விசாரணைக்கு உட்பட்டது என்ற குறிப்புடனே ‘கடிகாரம்’ சின்னத்தை பயன்படுத்த வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.

The post ‘கடிகாரம்’ சின்னம் பயன்படுத்த அஜித் பவார் தரப்புக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை appeared first on Dinakaran.

Related Stories: