நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக காங்கிரஸ் கட்சியில் 31 பேர் கொண்ட நிதிக்குழு

சென்னை: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழக காங்கிரஸ் கட்சியில் 31 பேர் கொண்ட நிதிக்குழுவை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. திமுக தலைமையிலான கூட்டணி தொகுதி பங்கீட்டை நிறைவு செய்து அடுத்த கட்ட பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது. அதன் அடிப்படையில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர் தேர்வு ஒருபுறம் நடந்தாலும், அடுத்த கட்ட தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளது.

தேர்தல் பணிகளை சிறப்பாக கையாளும் வகையில் பல்வேறு குழுக்களை காங்கிரஸ் கட்சி நியமிக்க உள்ளது. அதன்படி, கட்சியின் செயல்பாடுகளை தொய்வில்லாமல் நடத்துவதற்கு தேவையான நிதி ஆதாரத்தை உருவாக்கும் வகையில் நிதிக்குழு ஒன்றை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அமைத்துள்ளார்.இந்த குழுவில், தமிழக காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன் தலைமையில் மொத்தம் 31 பேர் இடம் பெற்றுள்ளனர். குறிப்பாக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார், நாசே ராமச்சந்திரன், விஜய் வசந்த் எம்பி, அருள் பெத்தையா, எம்எல்ஏக்கள் அசன் மவுலானா, துரை சந்திரசேகர், ஊர்வசி அமிர்தராஜ், தென்சென்ன மாவட்ட காங்கிரஸ் முன்னாள் பொருளாளர் தி.நகர் ராம் உட்பட 31 பேர் இடம்பெற்றுள்ளனர்.

The post நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக காங்கிரஸ் கட்சியில் 31 பேர் கொண்ட நிதிக்குழு appeared first on Dinakaran.

Related Stories: