திருப்பதி மாவட்டத்தில் 2 இடங்களில் மொத்த பால் குளிரூட்டும் மையம்

*கலெக்டர் தொடங்கி வைத்தார்

திருப்பதி : திருப்பதி மாவட்டத்தில் 2 இடங்களில் மொத்த பால் குளிரூட்டும் மையத்தை கலெக்டர் லட்சுமி ஷா தொடங்கி வைத்தார். திருப்பதி மாவட்டம் சின்ன கொட்டிகல்லு மண்டலம் நல்லபரரெட்டி பள்ளி மற்றும் செருவு மண்டலப்பள்ளி கிராமங்களில் மொத்த பால் குளிரூட்டும் மையத்தை மாவட்ட கலெக்டர் லட்சுமி ஷா நேற்று தொடக்கி வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், ஜெகன் அண்ண பால் திட்டத்தில் பால் சேகரிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பால் பண்ணையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அந்தந்த கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள ஏஎம்சியூக்களில் அமுல் நிறுவனத்திற்கு பால் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து அனைத்து பால் உற்பத்தியாளர்களும் கள அளவில் பால் உற்பத்தியாளர்களுக்கு விளக்கமளிக்க வேண்டும். இதில் ஊக்குவிப்பாளர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும்.

தனியார் பால் கறவையால் கிடைக்கும் வருமானத்திற்கும், அமுல் கறப்பதால் கிடைக்கும் வருமானத்திற்கும், லாபத்திற்கும் உள்ள வித்தியாசத்தை, அனைத்து பால் உற்பத்தியாளர்களும் புரிந்து
கொள்ளும் வகையில், கள அளவில் விளக்க வேண்டும். ஏஎம்சியு களில் ஏற்கனவே பங்குபெறும் பெண் பால் பண்ணையாளர்கள் இந்த விவரங்களை தங்கள் சக பெண் விவசாயிகளிடம் தெரிவிக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, தானியங்கி சேகரிப்பு மூலம், பால் சேகரிப்பு நேரத்தில், சம்பந்தப்பட்ட விவசாயி தானாக பால் அளவு, தரம், கொழுப்பு சதவீதம் மற்றும் விலை பற்றிய குறுந்தகவல்களைப் பெறுகிறார். அது பால் மேம்பாட்டு சேவையகத்துடன் இணைக்கப்பட்டு அவர்களுக்கும் தகவல் செல்கிறது. இதன் மூலம் பால் விவசாயிகள் இடைத்தரகர்கள் இல்லாமல் பயனடைவார்கள்’ என்றார். இதில், பால் கூட்டுறவு சங்க அதிகாரிகள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post திருப்பதி மாவட்டத்தில் 2 இடங்களில் மொத்த பால் குளிரூட்டும் மையம் appeared first on Dinakaran.

Related Stories: