செம்மஞ்சேரியில் ரூ.78 கோடி மதிப்பில் கழிவுநீர் குழாய் பதிக்கும் பணி: குடிநீர் வாரியம் தகவல்

சென்னை: சென்னை குடிநீர் வாரியம் சார்பில் ரூ.78.58 கோடி மதிப்பீட்டில் சோழிங்கநல்லூர் மண்டலம், 200வது வார்டுக்கு உட்பட்ட செம்மஞ்சேரியில் ஒருங்கிணைந்த பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ், கழிவுநீர் குழாய் பதிக்கும் பணிகளை கடந்த 8ம் தேதி அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். அதன் அடிப்படையில், செம்மஞ்சேரி பகுதிகளில் 21.20 கி.மீ நீளத்திற்கு 250 மி.மீ முதல் 400 மி.மீ விட்டமுடைய கழிவுநீர் குழாய்கள் மற்றும் 9.72 கி.மீ. நீளத்திற்கு 150 மி.மீ முதல் 500 மி.மீ. விட்டமுடைய கழிவுநீர் விசை குழாய்கள் பதிக்கும் பணிகள் கடந்த 9ம்தேதி தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 827 எண்ணிக்கையிலான இயந்திர நுழைவாயில்கள், 2 கழிவுநீரிறைக்கும் நிலையங்கள், 5 கழிவுநீர் உந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு நாளொன்றுக்கு 4.85 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சோழிங்கநல்லூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சுத்திகரிக்கப்படும். இதன்மூலம், 51,114 பொதுமக்கள் பயன்பெறுவர். இவ்வாறு சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

The post செம்மஞ்சேரியில் ரூ.78 கோடி மதிப்பில் கழிவுநீர் குழாய் பதிக்கும் பணி: குடிநீர் வாரியம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: